தமிழக மீனவர்கள் மீது கற்கள்,பாட்டில்களை வீசி தாக்குதல்: இலங்கை கடற்படை அட்டூழியம்!

ராமேசுவரத்தை சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தபோது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேஷ்வரம் மீனவர்கள் மீது கற்கள்,பாட்டில்களை வீசி அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் அச்சம் காரணமாக மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் இரவோடு இரவாக கரை திரும்பத்தொடங்கினர். மேலும் கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க விடாமல் இலங்கை கடற்படை விரட்டியடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

நேற்று ராமேசுவரம் மீனவர்கள் 8 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.  2 நாட்களுக்கு முன் இதேபோன்று ஒரு படகையும், 10 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றது குறிப்பிடத்தக்கது.

இலங்கை கடற்படைகச்சத்தீவுதமிழக மீனவர்கள்ராமேசுவரம்
Comments (0)
Add Comment