மேலும் மீனவர்களின் மீன் பிடித் தளபாடங்களை சேதப்படுத்தியுள்ளது இலங்கை கடற்படை. மீனவர்களின் படகுகளில் ஏற்படுத்திய சேதம் காரணமாக ஒரு படகு கடலில் மூழ்கியுள்ளது. அந்த படகில் இருந்த 5 மீனவர்களை மற்றைய மீனவர்கள் காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்துக்கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இலங்கையில் புதிய அரசு ஆட்சி அமைத்திருக்கும் நிலையில், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையின் தாக்குதல் தொடர்வது குறிப்பிடத்தக்கது.