மோடியின் இலங்கை பயணத்தை முன்னிட்டு அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 86 பேரை விடுதலை செய்ய அதிபர் சிறிசேன உத்தரவிட்டுள்ளார். கடந்த மாதம் காரைக்கால் மீனவர்கள் 67 பெரும், நாகை மீனவர்கள் 19 பேரும், இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டனர்.
இவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டைமான் தெரிவித்த நிலையில் அதிபர் சிறிசேன மீனவர்களை விடுவிக்க உத்தவிட்டுள்ளார். இது பற்றி கருத்து தெரிவித்த மீனவர்கள் இலங்கை கடற்படை அட்டூழியத்தை நிறுத்த பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். கடந்த ஆண்டு மோடி பதவியேர்ப்பு விழாவில் அப்பொதிய அதிபர் ராஜபக்சே பங்கெற்ற போது சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
ஆனால் படகுகள் விடுவிக்கப்படவில்லை. பிரதமர் மோடி நாளை இலங்கை செல்கிறார், அங்கிருந்து யாழ்ப்பாணம் உளிட்ட தமிழர் பகுதிகளையும் அவர் பார்வையிடுகிறார். 1987-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய பிரதமர் ஒருவர் இலங்கை செல்வதே இதுவே முதல் முறையாகும்.