இலங்கை தமிழரசு கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட கிளைக்கூட்டம் சற்று முன்னர் நிறைவடைந்தது
இன்று(16) மாலை 3 மணியளவில் முல்லைத்தீவு கிளை தலைவர் திரு அ தணிநாயகம் அவர்களது தலைமையில் நடைபெற்றது
இந்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிவமோகன் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா மற்றும் கட்சியின் மாகாணசபை பிரதி தவிசாளர் வ கமலேஸ்வரன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் து ரவிகரன் பிரதேச சபை தவிசாளர்கள் உறுப்பினர்கள் அடங்கலாக மாவட்டத்தின் கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு கலந்துரையாடினர்
சுமார் 2.3௦ மணித்தியாலங்கள் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின் இறுதியில்இலங்கை தமிழரசு கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட கிளை தலைவர் திரு அ தணிநாயகம் அவர்கள் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்
இன்று நாங்கள் எமது முல்லைத்தீவு மாவட்ட கிளை கூட்டத்தை கூட்டியிருந்தோம் இன்று நாங்கள் வித்தியாசமான சந்தோசகரமான பல காரியங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்ற வகையில் இன்றைய கூட்டம் அமைந்திருந்தது
முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழரசு கட்சியின் செயற்ப்பாட்டை அல்லது தமிழ் மக்களின் வினைத்திறனான சேவையை மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்க்கான சேவையை ஒரு வழிவகையையில் இன்று கூட்டத்தை நடத்தியிருக்கிறோம்
கூட்டத்தில் பல முக்கியமான தீர்மானங்களை எடுத்திருக்கின்றோம் அதிலும் இன்று மிக முக்கியமாக அடிப்படை தேவையாக இருக்கின்ற வடமாகாண சபையை மான்குளத்துக்கு கொண்டுவருவது என்ற தீர்மானத்தை இது பல முறை பல இடங்களில் கதைக்கப்பட்டு அது சாத்திய படும் என்ற நம்பிக்கை அற்றுப்போன நிலையில் நாங்கள் இன்று ஒரு தீர்மானத்தை எடுத்திருக்கின்றோம் குறுகிய காலத்தில் அதை இங்கு வைக்கவேண்டும் என்பதற்காக ஒரு ஊர்வலத்தை அல்லது கவனயீர்ப்பை நாங்கள் செய்து சம்மந்தப்பட்ட தரப்பினருக்கு அதை வெளிப்படுத்துவதற்க்கான முயற்ச்களை செய்வதற்கு எமது இளைஞர்கள் முன்வந்திருக்கின்றனர்
அதனை விட எமது கட்சியின் மாவட்ட அலுவலகம் ஒன்றை ஒட்டுசுட்டானில் திறந்து வைக்க தீர்மானித்திருக்கின்றோம்
அதனை விட எமது கட்சியின் சில மூலக்கிளை உறுப்பினர்கள் மாற்று கட்சிக்கு வேலை செய்தமையால் அவர்களை மாற்றி அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்தார்