முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 2017 ம் ஆண்டு பங்குனி மாதம் 8 ம் திகதிமுதல் இன்று வரை முல்லைத்தீவில் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் இன்று கருத்து தெரிவித்த உறவுகள்
தற்போதைய அரசியல் குழப்பம் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு தீர்வை அரசாங்கம் பெற்று தராது என ஏற்கனவே நாங்கள் சர்வதேசத்திற்கு தெரியப்படுத்தியதை உறுதிப்படுத்துகிறது
தற்போது இலங்கை அரசின் அரசியல் குழப்பம் இதனை சர்வதேச சமூகம் புரிந்துகொள்ளவேண்டும் இங்கு ஆட்சிக்காக அவரவர் அடிபட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்
இந்த சந்தர்பத்தில் எங்கள் பிரச்சனைக்கு யார்தீர்வு தருவார்கள் அரசாங்கம் தீர்வு தருவார்களா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதனை நீங்களே எடுத்துக்கொள்வேண்டும் நேரடியாக அரசியல் குழப்பத்தினை பார்க்கின்றீர்கள் இந்த அரசியல் குழப்பத்தால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு எந்த தீர்வும் கிடைக்காது. என்றும் சர்வதேசம் இதனை சரியாக பார்க்கவேண்டும் என்றும்,
இதற்காக சர்வதேசத்தினை நாங்கள் நீண்ட நோக்குடன் பார்த்துக்கொண்டு இருக்கின்றோம் சர்வதேசத்தினை நம்பி நாங்கள் நிக்கின்றோம் தமிழர்களின் ஒட்டுமொத்த பிரச்சனைக்கும் சர்வதேசம் தான் முடிவெடுத்து தரவேண்டும் என்று காத்து நிக்கின்றோம்.என தெரிவித்துள்ளனர்