தமிழர்களுக்காக உயிர் தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூர்வதில் என்ன தவறு!

யுத்தத்தில் உயிரிழந்த இராணுவத்தினருக்கு சமாதிகள் கட்டவும், அஞ்சலி செலுத்தவும் உரிமை உள்ள நிலையில், தமிழ் மக்களுக்காக உயிரை தியாகம் செய்த மாவீரர்களை நினைவுகூர்வதில் என்ன தவறு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிவப்பிரகாசம் சிவமோகன் சபையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான முதல் நாள் விவாதத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், உயிரிழந்தவர்களின் கல்லறைகளை அழிப்பவர்கள் கௌரவமானவர்கள் அல்ல. ஆனால் கடந்த ஆட்சியில் எமது மாவீர்களின் கல்லறைகள் புல்டோசர்கள் கொண்டு அழிக்கப்பட்டன.

யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு கல்லறை கட்டவும், அஞ்சலிகளைச் செலுத்தவும் எமக்காக உயிர்நீர்த்த மாவீரர்களுக்கு கல்லறை கட்டவும் எமக்கு உரிமை இல்லையா?

யுத்தத்தில் உயிரிழந்த இராணுவத்தினருக்கு சமாதிகள் கட்டவும் நினைவு அஞ்சலி செலுத்தவும் உரிமை காணப்படும் நிலையில், தமிழ் மக்களுக்கு ஏன் மாவீரர்களை நினைவு கூறுவதற்கு உரிமை இல்லை என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதேவேளை, சபையில் தனது உரையை ஆரம்பித்த நாடாளுமன்ற உறுப்பினர், மாவீரர்களையும் போரில் உயிரிழந்த மக்களையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கல்லறைகள்சிவமோகன்தமிழர்கள்தியாகம்நினைவு நாள்போராட்டம்மாவீரர் நாள்
Comments (0)
Add Comment