தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் தமிழர் தாயகத்தின் தலைநகரான , திருகோணமலையில் அழகிய சிலைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த சிலைகள் திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் இராவணன் வெட்டுக்கு அருகே கடலின் அடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
கடல் மட்டத்தில் இருந்து 80 அடிக்கு கீழே குறித்த சிலைகள் கிடைத்துள்ளன.
திருகோணமலை பிரதேசமானது புராதன காலத்திலிருந்து தமிழர்களின் தலைநகரமாகவும், தமிழர்களின் பண்பாட்டு விழுமியங்களை அதிகளவில் உள்ளடக்கிய நகராகவும் திகழ்கின்றது.
இந்நிலையில், திருகோணேஸ்வரம் ஆலயத்திற்கு அருகே தற்போது மீட்கப்பட்டுள்ள சிலைகள் தொடர்பில் பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இவை குறித்த ஆலயத்தினுடைய சிலைகளா அல்லது, ஆலய கட்டுமானத்தின்போது நீரினுள் புதையுண்டு போனவையா என பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.
பல்லின சமூகத்தை கொண்ட நகரம்
தற்பொழுதுதிருகோணமலை நகரமான பல்லின சமூகத்தை கொண்ட நகரமாக மாற்றம் அடைந்துள்ளது.
எனினும், தமிழர் தாயகமான திருகோணமலையில் மீட்கப்பட்ட இந்த அழகிய சிலைகள் தமிழர்களின் சிறப்பை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது என்பதில் ஐயமில்லை.