தமிழீழ மக்களுக்காய் உயிர்நீத்த முருகதாசனின் நினைவுதினம் இன்று!

இலங்கைத் தீவில் நடைபெற்ற இன அழிப்புப் போரை நடுத்து நிறுத்துமாறும் தமிழீழ மக்களின் உரிமையைக் கோரியும் ஐ.நா முன்றலில் தீக்குளித்து உயிர்நீத்த முருதாசனின் நினைவுதினம் இன்றாகும்.
வர்ணகுலசிங்கம் முருகதாசன் இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் டிசம்பர் 2, 1982 இல்  துன்னாலை என்ற ஊரில் பிறந்தவர். புலம் பெயர்ந்து இலண்டனில் வசித்து வந்தவர்.
அகவை 27 உடைய முருகதாசன் சுவிட்சர்லாந்தில் ஐக்கிய நாடுகள் அவையின் முன்றலின் முன்பாக 2009, பெப்ரவரி 12 வியாழக்கிழமை இரவு 8:15 தொடக்கம் 9:45 நிமிடம் வரையான நேரத்துக்குள் இன அழிப்பில் இருந்து ஈழத்தமிழ் மக்களைக் காப்பாற்றக்கோரி தீக்குளித்து இறந்தார்.
இவர், 7 பக்கங்களுக்கு “உலக சமூகத்துக்கு தமிழினத்தின் சார்பில் என் ஆத்மார்த்த வேண்டுகோள்” என்ற தலைப்பில் ஒரு மரண சாசனம் எழுதி வைத்து விட்டு தீக்குளித்தார்.
இலங்கையின் உள்நாட்டுப் போரை எல்லோரினதும் கவனத்திற்கு கொண்டு வருவதற்கு சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் அவையின் முன்றலில் 2009, பெப்ரவரி 12 தீக்குளித்து மரணமடைந்த முருகதாஸ் விரும்பியிருந்தார் என்று லண்டன் பிபிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈகப்பேரொளி முருகதாசனின் இறுதிவணக்கம் பிரித்தானியாவில் மார்ச் 7, 2009 நடைபெற்றது.
முருகதாசனின் இறுதி மரண சாசனக் கடிதம் ஏழு பக்கங்களைக் கொண்ட நீண்ட கடிதம். இக்கடிதத்தில் கூடுதலான பக்கங்கள் அப்பாவி மக்கள் மீதான தாக்குதல்களை கண்டிப்பதோடு, வைத்தியசாலைகள் மீதான தாக்குதல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது. உரிமையை காக்க போராடுவதில் என்ன தவறு என்றும் அவர் கேட்டுள்ளார். தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் என்று கூறி, உண்மைக்காக உயிர் தருவதாக தெரிவித்து தனது மரணசாசனத்தை முடித்துள்ளார்.

 

ஈகைஈழ மக்கள்ஐ.நாதமிழீழ மக்கள்தியாகம்தீக்குளிப்புமுருகதாசன்
Comments (0)
Add Comment