தமிழீழ விடுதலைப்புலிகள் தம் இனத்தின் விடுதலைக்காக தெளிவான கொள்கையுடன் போராடியவர்கள் – முஸ்லீம் அமைச்சர்..

தமிழீழ விடுதலைப்புலிகள் தம் இனத்தின் விடுதலைக்காக தெளிவான கொள்கையுடன் போராடினார்கள். அதனால் தமிழ் மக்களும் அவர்களுக்கு ஆதரவளித்தார்கள் எனவும் இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார் .

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், உயிர்த்த ஞாயிறு தற்கொலைதாரிகளுக்கும் இடையில் துளியளவும் ஒற்றுமையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைதாரிகள், யாரோ ஒருவனின் தேவைக்காக கொள்கையே இல்லாமல் அப்பாவி மக்களைக் கொலை செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை இலங்கையில் எவரும் ஏற்க மாட்டார்கள் என்றும், குறித்த தீவிரவாத இயக்கம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

செண்பகம்ரவூப் ஹக்கீம்விடுதலைப்புலிகள்
Comments (0)
Add Comment