தமிழீழ விடுதலைப் புலிகைளை அழிக்க 5 நாடுகள் இலங்கை அரசுக்கு உதவி புரிந்ததாகவும் அதன் காரணமாகவே இலங்கை அரசங்கம் வெற்றி பெற்றதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண முதலசமைச்சர் இதுவரை ஆற்றிய உரைகளின் தொகுப்பாக நீதியரசர் பேசுகிறார் எனும் நூல் வெளியீடு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய 5 நாடுகளும் விடுதலைப் புலிகளை அழிக்க உதவின என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நாடுகள் புலிகளை தடை செய்து, செய்த உதவியினாலேயே இலங்கை வெற்றி பெற சந்தர்ப்பம் கிடைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
விடுதலைப்புலிகளை அழிக்கும் போது, தமிழ் மக்களின் இனப்பிரச்சனையைத் தீர்ப்பதாக பன்னாட்டு சமூகம் வாக்களித்திருந்ததாகவும் , எனினும் மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களின் ஒற்றுமையின் மூலமாக, இந்த நாட்டின் ஆட்சியாளர் யார் என்பதை தீர்மானிக்கும் வல்லமையையுடையவர்கள் என்பதை 2015 ஆம் ஆண்டில் நிரூபித்துள்ளதாகவும் . அந்த ஒற்றுமை தொடர வேண்டும் எனவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.