தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது.
இதன்போது புதிய அரசமைப்புக்கான வரைவு நகல் குறித்தும், ‘ஒருமித்த நாடு’, ‘ஒற்றையாட்சி’ ஆகிய சொற்பதங்கள் சம்பந்தமாகவும் கூடுதல் கவனம் செலுத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
அதோடு எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவது தொடர்பான அறிவிப்பையும் சம்பந்தன் இதன்போது வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.