மாவீரர்களின் உருவப்படங்கள் வைக்கப்பட்டு , அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வுகள் சிறப்பாக முறைப்படி தொடங்கப்பட்டது .
ஈழத்தமிழர் அகதி முகாமில் பல்லாயிக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு மண்ணுக்காய் இன்னுயிர் ஈந்த மாவீரர்களுக்க அஞ்சலி செலுத்தியமை இதுவே முதல் தடவை என தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஈழத்தமிழர்கள் மாத்திரமின்றி, தமிழக மக்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு உணர்வுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.