தமிழ்நாட்டின் மூன்றாவது பெண் முதலமைச்சர் ஆகிறார் சசிகலா…!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், அதிமுகவின் சட்டமன்ற குழு தலைவராக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் கூடிய விரைவில்

தமிழக முதல்-அமைச்சராக பதவியேற்க உள்ளார். வரும் 7 அல்லது 9-ம் தேதியில் அவர் தமிழக முதல்-அமைச்சராக பதவியேற்க உள்ளார்.

தமிழகத்தின் மூன்றாவது பெண் முதல்- முதலமைச்சர் என்ற பெருமையையும் சசிகலா தனதாக்குகிறார்.

தமிழகத்தின் முதல் பெண் முதல் – அமைச்சர் என்ற பெருமையை பெற்றவர் ஜானகி ராமச்சந்திரன் ஆவார். எம்.ஜி.ஆரின் மனைவியான ஜானகி, எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின்னர் 1988-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதியிலிருந்து ஜனவரி 30-ஆம் தேதி வரையில் பதவியில் இருந்தார்.

பின்னர் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 5 முறை தமிழக முதல்-அமைச்சராக பதவி வகித்தார். இவரை தொடர்ந்து மூன்றாவதாக சசிகலா முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்க உள்ளார். மூன்று பேரும் அதிமுகவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அதிமுகசசிகலாஜெயலலிதாதமிழ்நாடுபெண்முதலமைச்சர்
Comments (0)
Add Comment