தமிழ்நாட்டில் திடீர் நில அதிர்வு…

தமிழகம் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ள நிலையில் அதன் சுற்றுவட்டாரத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று(22) காலை நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளது.

திடீரென ஏற்பட்ட இந்த  நில அதிர்வால்   மக்கள் பெரும் அதிர்ச்சியும், அச்சமும் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் சேலம் மாவட்டத்தின் ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் இன்று காலை லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இதன் காரணமாக அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை நீர்மட்டம் உயரும் நிலையில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதெனப் பொதுமக்கள்  தெரிவித்துள்ளனர்.

இதேவேளை அவுஸ்திரேலியா அருகே இந்தியப் பெருங்கடலுக்கும், பசிபிக் பெருங்கடலுக்கும் இடையிலான பகுதியில் இன்று அதிகாலையில் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

கடலுக்குள் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட  இதன் தாக்கம் அவுஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களிலும் உணரப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகளே தமிழகத்தின் சேலத்திலும்  உணரப்பட்டிருக்கலாம் என மற்றொரு தகவல் வெளியாகியுள்ளமையும்  குறிப்பிடத்தக்கது.

இந்தியாசேலம்தமிழகம்நில அதிர்வு
Comments (0)
Add Comment