தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 15-ந்தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 13-ந்தேதி வரை நடந்தது. தமிழகம், புதுச்சேரியில் 10 லட்சத்து 72 ஆயிரம் மாணவ, மாணவிகள் 10-ம் வகுப்பு தேர்வை எழுதினார்கள்.  

தேர்வு முடிவுகளை இன்று (புதன்கிழமை) காலை 9.31 மணிக்கு நுங்கம்பாக்கத்தில் அரசு தேர்வுகள் துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டார். அதே நேரத்தில் மாணவர்கள், அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவல கங்களில் செயல்படும் தேசிய தகவலியல் மையங் களில் முடிவுகளை தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.  இது தவிர பள்ளிகள் மற்றும் நூலகங்களிலும் மாணவர்கள் கட்டணமின்றி மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்திருந்தனர்.

இதனால் பகல் 11 மணிக்குள் பெரும் பாலான மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவை மதிப் பெண்களுடன் தெரிந்து கொண்டனர்.  இன்று வெளியான 10-ம் வகுப்பு தேர்வில் மொத்தம் 93.6 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் ஒரு மாணவனும், ஒரு மாணவியும் மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.

அவர்கள் விபரம் வருமாறு:-

 1. சிவக்குமார் – நோபுள் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, பெரியவள்ளிக்குளம், விருதுநகர்.

 2. பிரேமசுதா – எஸ்.ஆர்.வி. எக்சல் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, குறுக்க புரம், ராசிபுரம்.

இவர்கள் இருவரும் 500 மதிப்பெண்களுக்கு தலா 499 மதிப்பெண் எடுத்து சாதனைப் படைத்துள்ளனர்.

மாணவர் சிவக்குமார் ஒவ்வொரு பாடத்திலும் எடுத்துள்ள மதிப்பெண்கள் விபரம் வருமாறு:-

தமிழ்    –  99

ஆங்கிலம்    – 100

கணிதம்    – 100

அறிவியல்    – 100

சமூக அறிவியல்    – 100

மொத்தம்       499

மாநிலத்தில் முதலிடம் பிடித்த மாணவர் சிவக்குமார் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர். அவர்  கூறும் போது, அடுத்ததாக காமர்ஸ் பிரிவை தேர்வு செய்து படித்து ஆடிட்டர் ஆவதே எனது லட்சியம். எனது இந்த வெற்றிக்கு காரணம் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் பெற்றோர். அன்றைய பாடங்களை அன்றே படிப்பதோடு புரிந்தும் படிப்பேன். இரவு சீக்கிரம் தூங்கி அதிகாலையில் எழுந்து படிப்பேன் என்றார்.

மாணவி பிரேமசுதா  மாணவி பிரேமசுதா ஒவ்வொரு பாடத்திலும் பெற்றுள்ள மதிப்பெண்கள்:-

தமிழ்    –  99

ஆங்கிலம்    – 100

கணிதம்    – 100

அறிவியல்    – 100

சமூக அறிவியல்    – 100

மொத்தம்       499

50 பேருக்கு இரண்டாமிடம்  மாநில அளவில் 50 மாணவ-மாணவிகள் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளனர். அந்த 50 மாணவர்களும் தலா 498 மதிப்பெண்கள் பெற்றுள்ள னர். மாநில அளவில் மூன்றாம் இடத்தை 224 மாணவ- மாணவிகள் பெற்றுள்ளனர். அவர்கள் தலா 497 மதிப் பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.

 10-ம் வகுப்பு தேர்வில் இந்த ஆண்டும் வழக்கம் போல மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சிப் பெற்றுள் ளனர். தேர்வு எழுதிய மாணவர்களில் 91.3 சதவீதம் பேரும், மாணவிகளில் 95.9 சதவீதம் பேரும் வெற்றி பெற்றுள்ளனர்.  தேர்வு எழுதிய மொத்தம் 10 லட்சத்து 72 ஆயிரத்து 225 பேரில் 7 லட்சத்து 33 ஆயிரத்து 637 மாணவ, மாணவிகள் 60 சதவீதம் மதிப்பெண்கள் எடுத்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஏப்ரல்தமிழ்நாடுதேர்வுபரீட்சைமுடிவுவகுப்புவெளியீடு
Comments (0)
Add Comment