தமிழ்மக்களினதும், தமிழ் அரசியல் தலைவர்களினதும் கருத்துக்களை அறிந்து கொள்ளும் முயற்சிகளில் பிரித்தானியா…

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் அடுத்தமாதம் ஆரம்பமாகவுள்ளthu.

இந்நிலையில், தமிழ்மக்களினதும், தமிழ் அரசியல் தலைவர்களினதும் கருத்துக்களை அறிந்து கொள்ளும் முயற்சிகளில் பிரித்தானியா இறங்கியுள்ளது.

ஜெனிவா தீர்மானத்தை முழுமையாக நிறைவேற்ற இலங்கை  அரசாங்கம் தவறியுள்ள நிலையில், எதிர்வரும் மார்ச் மாதம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கம் அதற்குப் பதிலளிக்க வேண்டிய நிலையில் உள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு அரசாங்கம்  அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையில், மீண்டும், ஒரு தீர்மானத்தை ஜெனிவாவில் கொண்டு வரும் முனைப்புகள் தீவிரமடைந்திருக்கின்றது.

இவ்வாறான நிலையில் இலங்கைக்கு சென்றுள்ள  பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகத்தின் தெற்காசிய விவகாரங்களுக்கான திணைக்களத்தின் தலைவரும், இந்தியாவுக்கான இணைப்பாளருமான பேர்கஸ் ஔல்ட்,

கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரை, சந்தித்துள்ளார்.

அதன் பின்னர் யாழ்ப்பாணம் சென்ற அவர், யாழ். மாநகர முதல்வர் இமானுவல் ஆர்னோல்ட் மற்றும் முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரையும்  சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

அதோடு அவர்  மேலும் பல அரசியல் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்தித்து வருவதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதரக அதிகாரிகளின் துணையுடன் பேர்கஸ் ஔல்ட்    இந்த கருத்தறியும் முயற்சியில்  ஈடுபட்டுள்ளார்.

ஜெனிவாவில் முன்னெடுக்கப்படவுள்ள நகர்வுகளுக்கான முன்னேற்பாடாகவே இவரது சந்திப்புகள் அமைந்திருப்பதாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்கம்அரசியல் தலைவர்கள்ஐ.நா மனித உரிமைகள் பேரவைசந்திப்புபிரித்தானியாமக்கள்
Comments (0)
Add Comment