யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் தமிழ் அரசியல் கைதிகளிற்கு ஆதரவாக முன்னெடுக்கபப்ட்டுள்ள ந்டைபவனி இன்று காலை ஆரம்பிகப்பட்டுள்ளது.
யாழ் பல்கலைகழகத்தில் இருந்து ஆரம்பமாகியுள்ள குறித்த நடைபவனி அநுராதபுரம் சிறைச்சாலை வரை செல்லவுள்ளது..
சிறைச்சாலைகளில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்யுமாறும்,
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்வதற்கான அரசியல் தீர்மானம் ஒன்றை அரசு எடுக்க வலியுறுத்தியும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து நேற்றைய தினம் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவிலேயே நடைபவனிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
குறித்த நடைபவனி கிளிநொச்சி – வவுனியா ஊடாக அநுராதபுரம் சிறைச்சாலையை சென்றடையவுள்ளமை குறிபிடத்தக்கது.