தமிழ் மக்களின் எதிர்காலத் தலைமைத்துவம் தொடர்பில் கூடி ஆராயவுள்ளது தமிழ் மக்கள் பேரவை..

தமிழ் மக்களின் எதிர்காலத் தலைமைத்துவம் தொடர்பில்  காத்திரமான முடிவொன்றை எடுப்பது குறித்து தமிழ் மக்கள் பேரவை எதிர்வரும் 31ம் திகதி யாழ்ப்பாணத்தில் கூடி ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கூட்டம் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில்  நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

வடக்கிலும், கிழக்கிலும் தமிழ் அரசியல் நெருக்கடியானதொரு நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளதால் உடனடியாக இதற்கு மாற்றுத்தீர்வொன்று எட்டப்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

இந்த  நிலையிலேயே தமிழ் மக்கள் பேரவை இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கின்றது.

எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு வழி காட்டக்கூடிய சரியான தலைமைத்துவம் தேவைப்படுவதாகவும் அந்தத் தலைமைத்துவம் ஒட்டுமொத்த தமிழினத்துக்காகக் குரல் கொடுக்கக்கூடியவராக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தே கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தமிழ் மக்கள் பேரவை அறிவித்துள்ளது.

இதேவேளை முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் ஏற்பட்டிருக்கும் விரிசல் மோசமான நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அனைத்துத் தமிழினத்தையும் ஒன்றுபடுத்தி ஒரே குடையின் கீழ் கொண்டுவரும் ஒரு பாரிய முயற்சி இது என தமிழ் மக்கள் பேரவை கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  .

கூட்டம்தமிழ் மக்கள் பேரவைதமிழ்மக்கள்தலைமைத்துவம்முடிவு
Comments (0)
Add Comment