தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டங்களை மழுங்கடிக்கச் செய்ய அரசாங்கம் சதி…

தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டங்களை மழுங்கடிக்கச் செய்ய அரசாங்கம் சதித் திட்டம் தீட்டுகின்றதா என நில மீட்புபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

நேற்று மாலை கேப்பாபுலவில் நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்கள் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றைநடத்தினர் இதன்போது கருத்து வெளியிடும்போதே  மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தனர்

அவர்கள் மேலும்  தெரிவிக்கையில்

கடந்த மூன்று வருடகாலமாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மற்றும் மாவீரர் நாள் நினைவேந்தல்களை நினைவு கூரஅரசாங்கம் அனுமதி வழங்கிய நிலையில் ஏன் விடுதலைப் புலிகளின் புகைப்படங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில்பல்கலைக்கழக மாணவர்களை மாத்திரம் கைது செய்ய வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

யாழ்.பல்கலைக்கழக வளாகத்துக்குள் கடந்த வெள்ளிக்கிழமை இராணுவம் நடாத்திய தேடுதல் நடவடிக்கையின் போது தமிழீழவிடுதலை புலிகளின் தலைவருடையதும், மாவீரா்களுடையதும் புகைப்படங்கள் இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு மாணவா்ஒன்றியத்தின் தலைவா் மற்றும் செயலாளர் இருவரும் கைது செய்யப்பட்டனா்.

கைது செய்யப்பட்ட இருவரும் கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு எதிராக பயங்கரவாதத்தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறும் கோரப்பட்டது.

இந்த நிலையில் மாணவர் ஒன்றியத்தின் தலைவர், மற்றும் செயலாளர் ஆகியோர் வெள்ளிக்கிழமை இரவு யாழ்ப்பாணம் நீதிமன்றநீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையில் முற்படுத்தப்பட்ட நிலையில் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில்வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் குறித்த வழக்கின் நகர்த்தல் பத்திரம் நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் இருவரையும்பிணையில் விடுவிப்பதா? அல்லது வழக்கிலிருந்து விடுதலை செய்வதா? என்ற கட்டளையை நாளை புதன்கிழமை வழங்கப்படும்என யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றா் அறிவித்திருந்தார்.

அதேவேளை, மாணவர்களை கைது செய்து தடுத்து வைத்துள்ளமைக்கு தமிழ் அரசியல் தலைவர்கள், சிவில் சமுக அமைப்பினர்மற்றும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் என பலரும் எதிர்ப்பு வெளியிட்டுவருகின்றனர்.

இந்த நிலையிலேயே கேப்பாபுலவில் இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி 798 ஆவது நாளாகதொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களை கைது செய்து தடுத்து வைத்துள்ளமைக்குதமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் ஸ்ரீலங்கா அரசாங்கம் பிறப்பித்துள்ள அவசரகால சட்டத்தின் ஊடாக ஜனநாயக வழி போராட்டங்கள்பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கேப்பாபுலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுமித் கட்சன் சந்திரலீலா குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்கு பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைபிரபாகரனை பாராட்டிய ஸ்ரீலங்கா ஜனாதிபதி உள்ளிட்ட தென்னிலங்கை அரசியல் வாதிகள், விடுதலைப் புலிகளின்புகைப்படங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் மாணவர்களை கைது செய்தது எந்தவகையில் நியாயம் என போராட்டத்தில்ஈடுபட்டுள்ள சிவப்பிரகாசம் அரியகலா கேள்வி எழுப்பியுள்ளார்..

அரசாங்கம்
Comments (0)
Add Comment