தமிழ் மக்களின் பலத்தை சர்வதேசத்திற்கு எடுத்துசொன்னது மட்டக்களப்பு மக்கள் புரட்சிப்போராட்டம்…

மட்டக்களப்பில் நேற்றையதினம்   இடம்பெற்ற போராட்டம் மக்களின் பலம் என்னவென்று சர்வதேசத்திற்கு வெளிக்காட்டியுள்ளதோடு, சிறுபான்மை மக்கள் பலமற்றவர்கள் அல்ல என்பதை வெளிப்படுத்தியுள்ளதாக அருட்தந்தை சுஜீந்திரன் செல்வநாயகம் தெரிவித்துள்ளார்.

நேற்று மட்டக்களப்பில்  வட. கிழக்கு மாகாண வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் ஏற்பாட்டில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும்   வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் பிரச்சினை அவர்களின் பிரச்சினை மாத்திரமல்ல சிறுபான்மை மக்களின் பிரச்சினை, சிறுபான்மை மக்கள் பலமற்றவர்கள் அல்ல என்பதை வெளிப்படுத்தும் பேரணியே இது  என்றும்,  இந்த போராட்டம் மக்கள் போராட்டமாக மாற்றம்பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாக  ஐ.நா. மனித உரிமை மாநாட்டில் ஒரு மாற்றம் ஏற்படும்  என்கின்ற நம்பிக்கை தங்களிற்கு  ஏற்பட்டுள்ளதாகவும்  அருட்தந்தை சுஜீந்திரன் செல்வநாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அருட்தந்தைசுஜீந்திரன் செல்வநாயகம்செண்பகம்தமிழர்போராட்டம்
Comments (0)
Add Comment