தமிழ் மக்கள் அகதிமுகாம்களில் அவர்களின் சொந்த வீடுகள் சிங்களவர்களின் உல்லாச விடுதி?

வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயப்பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களது வீடுகளை சிங்கள சுற்றுலாப்பயணிகளிற்கு விருந்தினர் விடுதியாக வழங்கி படை அதிகாரிகள் சிலர் வருமானம் ஈட்டிவருகின்றமை அம்பலமாகியுள்ளது.
வலி.வடக்கினிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் முகாம்களிலும் உறவினர் நண்பர்கள் வீடுகளிலும் 26 வருடங்கள் கடந்தும் அகதி வாழ்க்கையினை வாழ்ந்துவருகின்ற நிலையில் அவர்களது ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வீடுகளை அழகூட்டி தென்னிலங்கை சுற்றுலா சிங்கள பயணிகளிற்கு வாடகைக்கு வழங்கிவருகின்றமை அம்பலமாகியுள்ளது.
இடம்பெயர்ந்து அகதி வாழ்க்கை வாழ்ந்துவருகின்ற மக்கள் தமது சொந்த நிலங்களிற்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுவரும் நிலையினில் தென்னிலங்கையினிலிருந்து வருகை தரும் சிங்கள சுற்றுலா பயணிகள் சாதாரணமாக உயர்பாதுகாப்பு வலயப்பகுதியினுள் வாகனங்களினில் செல்ல படையினரால் அனுமதிக்கப்பட்டேவருகின்றனர்.
இவ்வாறு வருகை தரும் சுற்றுலா பயணிகள் படை அதிகாரிகளது குடும்பங்களை சேர்ந்தவர்களாக இருப்பதாகவும் அவர்களிற்கே ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களது வீடுகளை விருந்தினர் விடுதியாக வழங்கி படை அதிகாரிகள் சிலர் வருமானம் ஈட்டிவருகின்றமை அம்பலமாகியுள்ளது.

இராணுவம்உல்லாச விடுதிசிங்களவர்கள்தமிழர்கள்தென்னிலங்கைவீடுகள்ஸ்ரீலங்கா