தமிழகத்தின் தலைநகர் சென்னை கொலை நகரமாக மாறிவிட்டதோ என்று மக்கள் அஞ்சும் வகையில் படுகொலைகள் அடிக்கடி நடந்து வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் அண்மைக் காலமாக கொலை கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதாகக் கூறியுள்ளார். மக்கள் அச்சமின்றி வாழவும் அவர்களது உயிருக்கும் உடமைக்கும் உரிய பாதுகாப்பை வழங்கவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். கூலிப்படைகளையும், சமூக விரோத கும்பல்களையும் ஒடுக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் முத்தரசன் கேட்டுக்கொண்டுள்ளார்.