தவறான நோக்கில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்வதை ஏற்க முடியாது – உயர்நீதிமன்றம்

அரசியல் ஆதாயத்திற்காக, தவறான நோக்கில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்வதை ஏற்க முடியாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.  

மதுரையை சேர்ந்த வஞ்சிக்கொடி என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், மதுரை கிழக்கு வைத்தியநாதபுரம் தெரு ஆலமரம் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தாம் அதிகாரிகளிடம் மனு அளித்ததாகவும், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.   எனவே தனது மனுவை பரிசீலிக்க மாவட்ட ஆட்சியருக்கும், மாநகராட்சி ஆணையருக்கும் உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சி.டி.செல்வம் அடங்கிய அமர்வு, மக்கள் பிரச்னைக்கு தீர்வு காண பயன்படும் பொதுநல வழக்குகளை சிலர் தனிநபர் நலன், அரசியல் ஆதாயம் உள்ளிட்டவைக்காக பயன்படுத்துவதாக தெரிவித்தனர்.   பொதுநல வழக்குகளில்  உண்மையில் பொதுநல நோக்கம் இருக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், மனுதாரர் தான் கூறிய புகாருக்கு எவ்வித ஆதாரங்களையும் தாக்கல் செய்யவில்லை எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

அரசியல்ஆதாயம்உயர்நீதிமன்றம்தவறுதாக்கல்பொதுநலம்
Comments (0)
Add Comment