மக்களுக்காக தவ வாழ்வு வாழ்வதாகக் கூறிக்கொள்ளும் ஜெயலலிதாவுக்கு கோடாநாட்டில் உள்ள சொத்துகள் எதற்காக என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை ஆதரித்து ஜி.ராமகிருஷ்ணன் வாக்குசேகரித்தார். அதிமுகவின் ஊழல் ஆட்சிக்கு தமிழக மக்கள் முடிவு கட்ட வேண்டும் என்று கூறிய அவர், மதுவிலக்கை அதிமுக, திமுகவால் கொண்டுவர முடியாது என்று தெரிவித்தார்.
ஜெயலலிதா ஆட்சியில் அரசு நிர்வாகத்தில் ஊழல் தலைவிரித்தாடுவதாகவும் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டினார். 5 ஆண்டுகால ஆட்சியில் மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்கமுடியாத ஜெயலலிதா, மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்காக சலுகைகள் அளிப்பதாக அவர் விமர்சித்தார்.