தாடி வைத்திருக்கும் ஆண்களை விட, நாய்கள் தூய்மையானவை -அதிர்ச்சித்தகவல்

தாடி வைத்திருக்கும் ஆண்களிடம், நாய்களை விட அதிக கிருமிகள் உள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

ஒரு ஆராய்ச்சி குழுவினர், 18 ஆண்களின் தாடி முடி மற்றும் 30 நாய்களின் கழுத்து முடியை எடுத்து ஆய்வு செய்துள்ளனர்.

இதில் நாய்களின் முடியில் இருக்கும் கிருமிகளை விட, ஆண்களின் தாடி முடியில் இருக்கும் கிருமிகள் அதிகம் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து சுவிட்ஸர்லாந்தைச் சேர்ந்த பேராசிரியர் ஆண்ட்ரியாஸ் கட்ஜீட் கூறுகையில், தாடி வைத்திருக்கும் ஆண்களிடம், நாய்களை விட அதிக கிருமிகள் இருக்கிறது என்பது தங்கள் ஆராய்ச்சியின் முடிவில் தெரியவந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தாடி வைத்திருக்கும் ஆண்களுடன் ஒப்பிடும் போது, நாய்களே தூய்மையானவை என அவர் கூறியுள்ளார்.

ஆண்கள் தாடிசெண்பகம்
Comments (0)
Add Comment