தாம் இராணுவத்திடம்கையளித்த உறவுகளின் நிலவரம் என்ன – வவுனியாவில் மக்கள் ஆர்ப்பாட்டம்…

இன்று வடக்கு கிழக்கு மாவட்டங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் மாபெரும் கவணயீர்ப்புப் போராட்டம் வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் ஆரம்பமாகியுள்ளது.

தாம் இராணுவத்திடம்கையளித்த உறவுகளின் நிலவரம்.,மற்றும் இராணுவத்தினராலும், இலங்கை அரச புலனாய்வாளர்களினாலும், வெள்ளை வான்களில் கடத்திச்செல்லப்பட்ட எம் உறவுகள் எங்கே என்று இன்று பத்து {10} வருடமாக நாம் கேட்டவண்ணம் உள்ளோம்.

ஆனால் இன்று வரைக்கும் எதுவித பதிலும் இலங்கை அரசினால் எமக்கு கிடைக்காததினால், சர்வதேசந்தான் இதற்கான பதிலை நடககவிருக்கும். 40 வது ஜெனிவா அமர்
விலாவது இலங்கை அரசிடமிருந்து பெற்றுத் தரவேண்டும் என்பதனை கேட்டு,

இன்று வவுனியா பழை ய. பேரூந்து நிலையத்தில் ஆரம்பமாகி பொதுச்சந்தையூடாக வவுனியா அரசாங்க அதிபர் அலுவலகம் வரைக்கும் தமது வேதனைகளையும், ஆதங்கங்களையும் கூறிய வண்ணம் நடந்து செல்கின்றார்கள்.

இதில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவுகளுக்கு சர்வதேசம் நல்லதோர் பதிலை இலங்கை அரசிடம் இருந்து பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் அவர்கள்  கோரியுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வடகிழக்கு பொதுமக்கள்.பொது அமைப்பினர். மதகுருமார்கள். அருட்தந்தையர்கள். நலன் விரும்பிகள் என. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்தப் பேரணியில் கலந்து கொண்டு பேரூந்து நிலையத்திலிருந்து வவுனியா அரசாங்க அதிபர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்று கொண்டிருக்கின்றார்கள்.

காணமல் ஆக்கப்பட்டவர்கள்போராட்டம்மக்கள்வவுனியா அரசாங்க அதிபர் அலுவலகம்
Comments (0)
Add Comment