தர்சன் படுகொலை என்பது இனப்படுகொலையின் தொடர்ச்சியே.
இலங்கையின் அரசியல் சாசனம் தமிழர்களுக்கு எதிரானது என்பதே உண்மை.
அமெரிக்கத் தீர்மானம் என்பது ஏமாற்று வேலை என்பது நிரூபணமாகியிருக்கிறது.
ஐநா தீர்மானத்தின் மூலம் தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் என சொல்லி விட்டு, தர்சன் படுகொலைக்கு மௌனம் காக்கும் நாடுகளின் நிலைப்பாடு கண்டிக்கப்பட வேண்டியது.
ஐ.நாவின் கள்ள மௌனம் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டியது.
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நா மனித உரிமை ஆணையர் உடனடியாக தர்சன் படுகொலை குறித்து பேச வேண்டும்.
சிரியாவுக்கு அமைத்ததைப் போன்று இலங்கை அரசு குறித்து விசாரிக்க பன்னாட்டு குற்றவியல் தீர்ப்பாயத்தினை அமைக்க வேண்டும்.
இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான், சீனா அதிகாரிகளும் விசாரிக்கப்பட வேண்டும்.
தெற்கு சூடானுக்கு நடத்தியதைப் போன்று தமிழீழ விடுதலைக்குப் பொதுவாக்கெடுப்பினை நடத்த வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இதை முன்னிட்டு முருகதாசன் நினைவு நாளான பெப்ரவரி 12 ம் தேதி ஐ.நா அலுவலகம் முற்றுகையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.