சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹஜ் யாத்திரைக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
நேற்று முன்தினம் மாலை ஜனாதிபதி செயலகத்தில், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து நீண்ட நேரம் பேச்சு நடத்தி இருந்தார்.
அதனை அடுத்து ஹக்கீம் தலைமையிலான, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள், நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு மக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்
இதேவேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், அதன் தலைவர் றிசாத் பதியுதீன் தலைமையில் நேற்று அதிகாலை மக்காவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாகவும் தெரிவிகபப்டுகின்றது
ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவு அளித்து வந்த, இந்த இரண்டு கட்சிகளினதும், 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்காவுக்கு ஒன்றாகப் புறப்பட்டுச் சென்றுள்ளமை அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.