திட்டமிட்டு சிங்கள மயமாக்கப்டும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் தாதியர் பயிற்சி கல்லூரி …

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையும்  தாதியர் பயிற்சி கல்லூரியும்  முற்றாக சிங்களமயமாகி வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு அரசியல்வாதிகளதும் அரசதுறை அதிகாரிகளினதும் கடமை தவறிய  நிர்வாவாக  முறைமையால் மாவட்டத்தின் பல பாகங்களிலும் பௌத்தமயமாக்கல் எளிதாக நடந்தேறி வருகின்றது.

அந்தவகையில் இன்றைய தினம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நிருவாகத்தின் சீரின்மையை பயன்படுத்தி ,

அந்த நிருவாகத்தின் கீழ் இயங்கும் தாதியர் பயிற்சி கல்லூரி அதிபர் மற்றும் போதனாசிரியர்கள், மாணவர்கள் உள்ளடங்கலான குழாத்தினர் பாரிய “பிரித்” ஓதும் நிகழ்வொன்றை நடாத்தியுள்ளனர்.

கல்லூரியில் பரிந்துரைக்கப்பட்ட பாடவிதான செயற்பாடுகளை மீறி,  ஆக்கிரமிப்பு மனோநிலையில் அங்குள்ள  சிங்கள மாணவர்களும் அதிபரும் இந்த நிகழ்வை நடாத்தியுள்ளனர்.

இனத்தை விற்று,தன்மானத்தை விற்று பிழைப்பு நடாத்துகின்ற அங்குள்ள தமிழ் போதனாசிரியர்களும் இந்த சடங்கிற்கு   பூரண ஆதரவை வழங்கியுள்ளதாகவும் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனம்,மதம்,கலாச்சாரம் என்பன பறிபோகாது காத்த புனிதர்கள் வாழ்ந்த மண்ணில் இன்று அத்தனையும் செயலிழந்து போகின்றமை வருந்ததக்க விடயம் என்பது சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

 

தாதியர்பயிற்சி கல்லூரிபோதனா வைத்தியசாலைமட்டக்களப்பு
Comments (0)
Add Comment