அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர்களை போலீசார் சமாதானம் செய்துவைத்தனர். இதற்கிடையே இரவு 10 மணிக்கு பிரசாரம் முடிந்து, திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே உள்ள அ.தி.மு.க.வின் தேர்தல் அலுவலகத்தில் கலைக்குழுவினர் பயன்படுத்திய பிரசார வாகனம் நிறுத்தப்பட்டது. நள்ளிரவில் அங்கு வந்த ஒரு கும்பல், அந்த பிரசார வாகனத்தில் கட்டப்பட்டு இருந்த மின்விளக்குகளை சேதப்படுத்தியது.
மேலும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, வேட்பாளர் படம் பொறிக்கப்பட்டு இருந்த பேனரும் கிழிக்கப்பட்டது. சத்தம் கேட்டு காவலாளி வந்ததால், அங்கிருந்து அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து அ.தி.மு.க. சார்பில் நகர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதில் சவேரியார்பாளையத்தில் அ.தி.மு.க. பிரசார வாகனத்தை திண்டுக்கல் தொகுதி பா.ம.க. வேட்பாளர் தடுத்ததாகவும், அவருடைய தூண்டுதலின் பேரிலேயே அந்த பிரசார வாகனம் சேதப்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அந்த புகாரின் பேரில் பா.ம.க. வேட்பாளர் பரசுராமன் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.