திமுகவில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி மீண்டும் இணையப் போவதாக வெளியான தகவல் வெறும் வதந்தி என்று கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேடு சந்தையில், வியாபார பிரதிநிதிகளுடன் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடினார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், போலி வாக்காளர் பட்டியல் பற்றி திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் தொடர்ந்து புகார்கள் அளிக்கப்பட்டு வருவதாகக் கூறினார். அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். திமுகவில் மு.க.அழகிரி இணையப் போவதாக வெளியான தகவலில் உண்மையில்லை என்றும் அவர் மறுத்தார்.