திமுகவுக்கு ஆதரவாக திருநங்கைகள்

திமுகவுக்கு ஆதரவாக தூத்துக்குடியில் திருநங்கைகள் கலை பிரச்சார பயணத்தை தொடங்கியுள்ளனர்.   சட்டமன்ற தேர்தலையொட்டி அனைத்து கட்சிகளும் தங்களது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன.

இதேபோல் அகில இந்திய திருநங்கைகள் சார்பில் திமுகவுக்கு ஆதரவாக கலை பிரச்சார பயணம் தூத்துக்குடியில் தொடங்கியது. இதில் கரகாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புறக் கலைகள் மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.   திருநங்கைகளின் கலைபிரச்சாரம் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று இறுதியில் சென்னையில் நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதரவுகலைசட்டமன்றம்திமுகதிருநங்கைகள்தூத்துக்குடிதேர்தல்பயணம்பிரச்சாரம்
Comments (0)
Add Comment