திமுகவுடன் தேமுதிக சேர்ந்தால் காட்சி மாற்றம் மட்டுமே ஏற்படும் – தமிழருவி மணியன்

திமுக அதிமுகவிலிருந்து ஒரு அங்குலம்கூட விலகாத அளவிற்கு தேமுதிகவின் அரசியல் பாதை இருப்பதால் அக்கட்சியால் மாற்று அரசியலை உருவாக்க துணை நிற்க முடியாது என காந்திய மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.  

சட்டமன்ற தேர்தலில் 19 மாவட்டங்களில் 26 வேட்பாளர்களை களம்  இறக்கியுள்ள காந்திய மக்கள் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் குளச்சலில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தலைவர் தமிழருவி மணியன்,  மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர்  அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் தொடங்கிய அப்துல் கலாம் லட்சிய இந்தியா கட்சியுடன் காந்திய மக்கள் கூட்டணி அமைத்துள்ளதை சுட்டிக்காட்டினார்.

தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை விரும்புபவர்கள் தங்கள் கூட்டணிக்கு ஆதரவு அளிப்பார்கள் என்றும் தமிழருவி மணியன் நம்பிக்கை தெரிவித்தார். திமுகவுடன் தேமுதிக கூட்டணி சேர்ந்தால் காட்சி மாற்றம் மட்டுமே ஏற்படும் என்றும் தமிழருவி மணியன் விமர்சித்தார்.

அதிமுகஅரசியல்கட்சிகாட்சிகூட்டணிதமிழருவிதிமுகதேமுதிகமணியன்மாற்றம்
Comments (0)
Add Comment