சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தற்போதைய தேர்தல் களத்தில் பொதுமக்களிடம் மெளனப்போர் நிலவி வருவதாக தெரிவித்தார். திமுக மற்றும் அதிமுகவின் மதுவிலக்கு பிரச்சாரத்தை பொதுமக்கள் நம்பவில்லை எனவும், கருத்துகணிப்பை வெளியிடும் ஊடகங்களிடம் உள்நோக்கம் உள்ளது என்றும் அன்புமணி குற்றம்சாட்டினார்.
மேலும் கடந்த 50 வருடங்களாக தமிழ்நாட்டை குடிகார, பிச்சைக்கார நாடாக திமுக மற்றும் அதிமுக கட்சிகள் மாற்றியுள்ளன என்றும் அவர் வேதனை தெரிவித்தார். தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையம் மெத்தனமாக செயல்படுவதாகவும், தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நடுநிலைமையாக செயல்படவில்லை எனவும் அன்புமணி ராமதாஸ் புகார் தெரிவித்தார்.