திமுகவை விமர்சிக்க கேள்வி கேட்க எனக்கு உரிமை உண்டு – அழகிரி

திமுக-வை விமர்சிக்கவும், கேள்வி கேட்கவும் தனக்கு அனைத்து உரிமைகளும் இருப்பதாக, மு.க.அழகிரி விளக்கமளித்துள்ளார்.  

இதுதொடர்பாக தனது முகநூலில் கருத்து தெரிவித்துள்ள மு.க.அழகிரி, திமுக பற்றி கருத்து சொல்ல, நான் யார் என்று, தன்னை யாரும் கேள்வி கேட்க முடியாது என கூறியுள்ளார். கட்சிக்காக மற்றவர்களை விட, தான் கூடுதலாக உழைத்துள்ளதாகவும், பலமுறை சிறை சென்றுள்ளதாகவும் மு.க. அழகிரி குறிப்பிட்டுள்ளார்.

தான் தவறு செய்திருந்தால், அது கட்சிக்காக நடந்த தவறாகவே இருக்கும் என்றும், கட்சி மீது பற்றுதலோடும், விசுவாசத்தோடும் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  இதன் காரணமாக திமுகவை பற்றி கவலைக் கொள்ளவும், தவறான பாதையில் செல்லும்போது கேள்வி கேட்கவும் தனக்கு உரிமை உண்டு எனவும் மு.க.அழகிரி கூறியுள்ளார்

அழகிரிஉரிமைகேள்விதிமுகமுகநூல்விமர்சனம்
Comments (0)
Add Comment