திமுக என்றைக்கும் தோற்காது! கருணாநிதி

தி.மு.க.வை தூய்­மை­யாக நடத்திச் சென்று அடுத்­த­டுத்து வெற்­றி­களை பெறு­வ­தற்கு முனைய வேண்டும் என்று தி.மு.க. தலைமை செயற்­குழு கூட்­டத்தில் கரு­ணா­நிதி தெரி­வித்­துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,
நான் உங்­க­ளுக்­கெல்லாம் இப்­போது அறி­வுரை எதுவும் கூறப்போவ­தில்லை. ஏனென்றால் உங்­க­ளுக்­கெல்லாம் இனிமேல் அறி­வுரை எதுவும் சொல்லத் தேவை­யில்லை என்று கரு­து­கிறேன். ஏனென்றால் பெற வேண்­டிய அறி­வு­ரை­க­ளை­யெல்லாம் இங்கே வீற்­றி­ருக்­கின்ற செயற்­குழு, சட்டப் பேர­வைக்கு வெற்றி பெற்ற உறுப்­பி­னர்கள் அனை­வரும் ஏற்­க­னவே அறிந்­தி­ருக்­கி­றீர்கள்.
இனி மேலா­வது நாம் எப்­படி செயற்­பட வேண்டும் என்­ப­தற்கு நம்மை நாமே திருத்திக் கொண்டு இடை­யிலே நுழைந்த துரோ­கச்­செ­யல்­க­ளுக்கு இடம் தராமல், தூய்­மை­யாக தி.மு.க.வை நடத்­திச்­சென்று, அடுத்­த­டுத்த வெற்­றி­களைப் பெறு­வ­தற்கு நாம் முனைய வேண்டும் என்று உங்­க­ளை­யெல்லாம் கேட்­டுக்­கொள்­கிறேன்.
தி.மு.க.என்­றைக்கும் தோற்­காது. தோற்­கப்­போ­வ­து­மில்லை. தி.மு.க.வை அழிக்­கலாம் என்று நினைத்­த­வர்கள் எல்லாம் அழிந்து போய்­விட்­டார்கள். இதற்கு முன்பே இந்தக் கட்­சிகள் தலை தூக்கி ஆடிய காட்­சி­க­ளை­யெல்லாம் நாம் பார்த்­தி­ருக்­கிறோம். அந்தக் காட்­சிகள் எல்லாம் மாயமாய் மறைந்­த­தையும் நாம் பார்த்­தி­ருக்­கிறோம்.
எனவே, அந்த நம்­பிக்­கை­யோடு இப்­ப­டிப்­பட்ட முடி­வு­க­ளைத்­தந்த தேர்தல் ஆணையம் மற்றும் தேர்­தலை நடத்­திய அதி­கா­ரிகள், அரசு இவர்­க­ளுக்­கெல்லாம் பாடம் போதிக்கும் வகை­யில் அடுத்து நாம் எடுத்து வைக்­கின்ற ஒவ்­வொரு அடியும் பல­மான அடி­யாக ,யாருக்கும் பயப்­ப­டாத அடி­யாக, துரோகம் விளைவிப்பவர்களுக்கு துணை போகாத அடியாக, எடுத்து வைக்க வேண்டுமென இந்தச் செயற்குழுவில் ஒவ்வொருவரும் சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

கருணாநிதிசட்டப்பேரவைதிமுகதுரோகம்வெற்றி
Comments (0)
Add Comment