தியாகத் தழும்புகளுடன் ஸ்டாலின்

தியாகத் தழும்புகளுடன், ஸ்டாலினின் அரசியல் வாழ்வு பொலிவு பெறுகிறது என்று மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

இது குறித்து வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுகவின் பொருளாளரும், இளைஞர்களின் நம்பிக்கை நாயகருமான தளபதி அருமை சகோதரர் மானமிகு முக ஸ்டாலின் அவர்களுக்கு இன்று 64ஆவது ஆண்டு பிறந்தநாள்!   இந்த 63 ஆண்டு நிறைவு என்ற கால கட்டத்தில், அவரது திராவிடர் இயக்க ஈடுபாடும், இளைஞர் அணி மூலமாக இயக்கச் செயல்பாடுகளில் அவர் ஈடுபட்டு, 1976ஆம் ஆண்டு ‘நெருக்கடி நிலை’ சிறைபிடிக்கப்பட்டு, அந்தச் சிறையில் தாக்கப்பட்டு, மிசா கைதியாக ஏறத்தாழ ஓராண்டு சிறைவாசத்துடன் இயக்கம் நடத்திய பல்வேறு போராட்டங்களிலும் களம் கண்டு, காராக்கிரகம் செல்லத் தயங்காது, தியாகத் தழும்புகளுடன், அவரது அரசியல் வாழ்வு பொலிவு பெறுகிறது!   படிப்படியாக, சென்னை மாநகர மேயர் சட்டப் பேரவை உறுப்பினர், அமைச்சர், துணை முதல்வர் என்ற பல்வேறு பொறுப்புகளிலும் அவர் தனிமுத்திரை பதித்து, அனைவரது அன்பை, ஆதரவை,  நல்லெண்ணத்தைப் பெற்றவர்!   இவை எல்லாவற்றையும்விட, கழகத்தின் கட்டுப்பாட்டைக் காத்து, பொறுத்தவர் பூமி ஆள்வார் என்ற இலக்கணத்திற்கு புது இலக்கியமாகத் திகழும் உழைப்புத் தேனீ!   அவரது பிறந்த நாளை அவர் அமைதியாக செலவழித்து, ஒரு புதுமையைச் செய்து, புகழ் மகுடத்தினை அணிந்துள்ளார்!   அவரது ‘நமக்கு நாமே’ பயணம் தமிழ் நாட்டு அரசியல்வாதிகளுக்கு ஒரு புதுப்பாடம், புது வகுப்புபோல் அமைந்தது! அவர் நல்ல உடல் நலத்தோடு, மேலும் திராவிடர் இயக்கத்தினை வழிநடத்தும் முத்தமிழ் அறிஞர் கலைஞருக்கு மிகப் பெரும் தள நாயகராக திகழ நெஞ்சார பாசத்துடன் வாழ்த்துகிறோம். வாழ்க – வாழ்கவே!” என்று தெரிவித்துள்ளார்

தழும்புதியாகம்பிறந்தநாள்பொலிவுவாழ்த்துவாழ்வுஸ்டாலின்
Comments (0)
Add Comment