தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு நல்லூரில் இளைஞர்கள் இரத்ததானம்…

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு இரத்ததான முகாமொன்று இன்று நல்லூரிலுள்ள தியாகி திலீபன் தூபிக்கு முன்னால் இடம்பெற்றுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அழைப்பின் பேரில் பெருமளவிலான இளைஞர்கள் சென்று  இரத்த தானம் அளித்துள்ளனர்.
இதேவேளை தியாக தீபன்  திலீபனை நல்லூரில் அமைந்துள்ள நினைவிடத்தில் நினைவுகூருவதைத் தடை செய்யும் கட்டளையை வழங்குமாறு யாழ் நீதிவான் நீதிவான் மன்றில் யாழ்  பொலிஸார் விண்ணப்பம் செய்துள்ளனர்.
மேலும்,  நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள  வேலி  பந்தல்,மற்றும்   திலீபனின் உருவப் படத்தை அகற்றுவதற்கான கட்டளையை யாழ் மாநகர சபையின் ஆணையாளருக்கு வழங்குமாறும் நீதிமன்றில் பொலிஸார் விண்ணப்பம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரத்தானம்இளைஞர்கள்தியாக தீபம்திலீபன்
Comments (0)
Add Comment