திருகோணமலையில் புத்தர் சேலையால் பதற்றம் …..

திருகோணமலை நகரில் உள்ள பிரதான ஆடை வர்த்தக நிலையம் ஒன்றில் புத்தரின் உருவம் பொறிக்கப்பட்ட சேலைகள் விற்பனைக்கு வைத்திருந்தததாக தெரிவிகப்படுகின்றது.

இதன் காரணமாக அங்கு பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில்  திருகோணமலை ஜெயசுமராமய விகாரையின் விகாராதிபதி ஸ்தலத்திற்கு சென்றுள்ளதோடு, .  திருகோணமலை தலைமையக பொலிஸாரும் அங்கு  விரைந்து சென்றதுடன்  பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை, குறித்த வர்த்தக நிலையத்தில் காணப்பட்ட புத்தரின் தலை பொறிக்கப்பட்ட 5 பீஸ் ஆடைகளையும் கைப்பற்றியுள்ளதாகவும்,

சம்பவம் தொடர்பில்  விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும்  திருகோணமலை பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆடைசேலைதிருகோணமலைபுத்தர்பொலிஸார்
Comments (0)
Add Comment