மூதூர் மட்டகளப்பு வீதி 3-சிடி சந்தியில் அமைந்திருக்கும் பொலிஸ் நியத்திற்கு தீவைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,
மூதூர் மட்டகளப்பு வீதி 3-சிடி சந்தியில் அமைந்திருக்கும் ( Safe Rest, Mowsooth Hotal ) அருகில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று இரவு 8.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.,
மணல் லொறி ஒன்று வீதியால் சென்ற துவிச்சக்கர வண்டி ஒன்றின் மீது மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது மூதூர் சாபி நகரை பிறப்பிடமாகவும் ஆலிம் நகரில் வசித்தவருமான மஹ்ரூப் மசூம் (வயது-29) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தை அடுத்து அப்பகுதியில் ஒன்று கூடிய மக்கள் வீதி மறித்து ரயர்களை எரித்துள்ளனர்.
அத்துடன் அருகில் இருந்த பொலிஸ் நிலையமும் தாக்குதலுக்கு உள்ளாகி எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.
இதனையடுத்து பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு மேற்கொண்டதை அடுத்து மக்களிற்கும் பொலிஸாருக்கும் இடையில் சமரசம் ஏற்பட்டதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.