இவ்விபத்தில் 9 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், 2 சிறுமிகள் உள்பட 7 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட அனைவரும் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் சுற்றுலா பயணிகள் உரிய அனுமதியின்றி மீன்பிடி படகில் கடலுக்குள் சென்றுள்ளதாகவும், மேலும், 7 பேர் செல்லக்கூடிய படகில் 30 பேர் சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.