திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் குற்ற வழக்கில் தொடர்புடையவர்கள் என்று ஈழத்தமிழர்கள் 3 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்க வலியுறுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், பல ஆண்டுகளாக சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள தங்களை விடுவிக்க அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாகவும், தமிழக அரசு உதவ வேண்டும் என்று வலியுறுத்தியும், ஈழத்தமிழர்கள் 11 பேர் கடந்த 1ம் தேதி மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.
தீவிரமாக போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனையில் காவல்துறையினர் அனுமதித்தனர். இந்த நிலையில் அவர்கள் தங்களது போராட்டத்தை அவர்கள் கைவிட்டனர். மருத்துவ சிகிச்சைக்கு பிறகு அவர்கள் மீண்டும் சிறப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.