திருடர்களைத் தலைதெறிக்க ஓட வைத்த விழிப்புக்குழு – யாழ் குப்பிளானில் சம்பவம்..

யாழ்.குப்பிளான் தெற்குப் பகுதியில் நேற்று அதிகாலை இடம்பெற்ற திருட்டு முயற்சி விழிப்புக்குழுக்கள் மற்றும் சுன்னாகம் பொலிஸாரின் ஒன்றிணைந்த செயற்பாட்டால்  முறியடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குப்பிளான் தெற்குப் பகுதியில் அண்மைக் காலமாக அதிகரித்துள்ள திருட்டுக்களைக் கட்டுப்படுத்த குப்பிளான் வடக்குப் பகுதியையும் சேர்த்து நான்கு வெவ்வேறு பகுதிகளில் விழிப்புக் குழுக்கள் இரவுநேரக் காவல் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதோடு  விழிப்புக் குழுவினருடன்   சுன்னாகம் பொலிஸாரும் இணைந்து செயற்பட்டு  வருகின்றனர்.

இந்நிலையில் குப்பிளான் மிந்திரை வீதியில்  அதிகாலை-03 மணியளவில் துவிச்சக்கர வண்டியில் இரு திருடர்கள் செல்வதாக விழிப்புக்குழுவினருக்கு  தகவல் கிடைத்துள்ளது.

அதனையடுத்து வீரமனைப் பகுதியில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த சுன்னாகம் பொலிஸாரும், விழிப்புக்குழுவினரும் சில நிமிடங்களுக்குள் குறித்த பகுதிக்கு வேகமாக சென்றுள்ளனர்.

ஏற்கனவே அங்கு   கடமையில் ஈடுபட்டிருந்த விழிப்புக் குழுவினரும்,  வீரமனைப் பகுதியிலிருந்து சென்ற விழிப்புக் குழுவும்,  பொலிஸாரும் இணைந்து தீவிர தேடுதல் நடத்தியுள்ளனர்.

இதனையடுத்துத் திருடர்கள் அங்கிருந்து  தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ள்ளது.

இதேவேளை   திருட்டு முயற்சியினை முறியடித்தமைக்காக விழிப்புக் குழுவினரையும்,,  பொலிஸாரையும்  ஊர்மக்கள் பாராட்டியுள்ளனர்.

குப்பிளான்திருடர்பொலிஸார்யாழ்ப்பாணம்விழிப்புக்குழு
Comments (0)
Add Comment