16-5-2016 அன்று நடந்துமுடிந்த சட்ட மன்ற தேர்தலில் அதிமுக சார்பில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சீனிவேல்(வயது 65). தேர்தல் முடிந்ததும் கடந்த 17-ம் தேதி திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சீனிவேல், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை 7.30 மணியளவில் சீனிவேல் உயிரிழந்தார். திருப்பரங்குன்றம் தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் 93,453 வாக்குகள் பெற்ற சீனிவாசன் திமுக வேட்பாளர் மணி மாறனை 22,992 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தார்.
15-வது சட்டசபை இன்றுகூடி, தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் எம்.எல்.ஏ.க்களாக பதவியேற்க உள்ள நிலையில், சீனிவேலுவின் மரணம் அ.தி.மு.க.வினரை கவலையடைய வைத்துள்ளது