பாதுகாப்பு இல்லாத கட்டடங்களில் நோட்டீஸ் : தீயணைப்புத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை தி.நகர் பகுதியில் பாதுகாப்பு இல்லாத கட்டடங்களில் நோட்டீஸ் ஒட்டுமாறு தீயணைப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

113 சி சட்டப்பிரிவு தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் தலைமையிலான அமர்வு, சென்னை தியாகராயநகரில் உள்ள கட்டடங்களில் தீயணைப்புக் கருவிகள் இல்லாத கட்டடங்களில் ‘இது பாதுகாப்பற்ற கட்டடம்’ என்ற நோட்டீஸை ஒட்டுமாறு உத்தரவிட்டது.

மேலும், அனைத்து கட்டடங்களையும் ஆய்வு செய்து 2 வாரங்களில் நோட்டீஸ் ஒட்டுமாறும் தீயணைப்புத் துறைக்கு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

விசாரணையின் போது, 2007ல் கட்டப்பட்ட கட்டடங்களை வரைமுறைப்படுத்த உருவாக்கப்பட்ட சட்டப்பிரிவு ஒரு மாயத் தோற்றமே. 113 சி சட்டப்பிரிவு விதிமுறைகள் இன்னும் உருவாக்கப்படவில்லை என்று தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் கண்டனம் தெரிவித்தார்.

இது தொடர்பாக மாநகராட்சி, சிஎம்டி, தமிழக அரசு இணைந்து ஒருங்கிணைந்த கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க வேண்டும். ஒருங்கிணைந்த கூட்டத்தை கூட்டவில்லை என்றால் அது நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும் என்று தலைமை நீதிபதி எஸ்.கே. கௌல் தெரிவித்தார்.

உயர் நீதிமன்றம்சென்னைதி.நகர்தீயணைப்புத் துறைபாதுகாப்பு இல்லாத கட்டடங்கள்
Comments (0)
Add Comment