தீவிரவாத இயக்கங்களின் தலைவர்களை கொல்பவர்களுக்கு ரூ. 1 கோடி

ஐ.எஸ்.ஐ.எஸ், தலீபான் மற்றும் அல்-கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவர்களை கொல்பவர்களுக்கு ரூ. 1 கோடி வழங்கப்படும் என்று இந்திய ஷியா முஸ்லிம் பிரிவு அறிவித்துள்ளது.

அல்கொய்தா தீவிரவாத பிரிவு தலைவனான அய்மான்–அல்–ஜவாஹிரி(63) வெளியிட்ட காணொளியில், இந்திய துணைக்கண்டத்தில் அல்–கொய்தா தீவிரவாத பிரிவுக்கு பக்கபலமாக காயிதத்–அல்–ஜஹாத் என்ற பெயரில் புதிய கிளை நிறுவப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முஸ்லிம் தலைவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு வெளியாகி உள்ள நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ், தலீபான், அல்-கொய்தா, ஜமாத்-உ-தாவா, ஹர்கத் உல் முஜாஹிதீன் ஆகிய தீவிரவாத இயக்கங்களின் தலைவர்களை கொல்பவர்களுக்கு ரூ. 1 கோடி வழங்கப்படும் என்று இந்திய ஷியா முஸ்லிம் பிரிவு அறிவித்துள்ளது.

அகில இந்திய ஷியா ஹூசைனி நிதியம் பொதுச்செயலாளர் செயத் ஹாசன் மெக்தி இதுபற்றி கூறுகையில், கடந்த 6ம் திகதி இந்திய இஸ்லாமிய தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது.

இதனையடுத்து 5 தீவிரவாத இயக்கங்களின் தலைவர்கள் தலைக்கு பரிசு வழங்குவது குறித்த தீர்மானம் எந்த எதிர்ப்பும் இன்றி தாக்கல் செய்யப்பட்டது. மேலும், மனிதநேயத்தையும், அப்பாவி மக்களையும் படுகொலை செய்யும் மேற்கண்ட தீவிரவாத இயக்கங்களின் தலைவர்கள் இந்த பூமியில் வாழவே தகுதியற்றவர்கள் என்று தெரிவித்துள்ளார்.

அறிவித்துள்ளதுஅல்-கொய்தாஇந்தியஇயக்கத்தின்என்றுஐ.எஸ்.ஐ.எஸ்.கொல்பவர்களுக்குதலீபான்தலைவர்களைதீவிரவாதபிரிவுமற்றும்முஸ்லிம்ரூ. 1 கோடிவழங்கப்படும்ஷியா
Comments (0)
Add Comment