முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட உயிலங்குளம் 50 வீட்டுத்திட்டத்தை சேர்ந்த 8 மக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது.
காணி உறுதிப்பத்திரங்கள் இன்று துணுக்காய் பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளது
துணுக்காய் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட உயிலங்குளம் 50 வீட்டுத்திட்டமானது 2012 ம் ஆண்டு இந்திய அரசாங்கத்தின் நிதியுதவிளில் SLRC நிறுவனத்தால்,
50 வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு காணிகள் வழங்கப்பட்டு பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மாற்றுவலுவுள்ளோர் அடங்கலாக 50 குடும்பங்கள் குடியேற்றப்பட்டனர்.
இருப்பினும் அவர்களது காணிகளுக்கான உறுதிப்பத்திரங்கள் இன்றுவரை வழங்கப்படாத நிலையில் குறித்த பகுதியில் ஆரம்பம் முதல் நிரந்தரமாக வசித்துவரும் 8 குடும்பங்களுக்கு,
இன்று காணி உறுதிப்பத்திரங்களை துணுக்காய் பிரதேச செயலாளர் கு பிரபாகரமூர்த்தி அவர்கள் இன்று வழங்கிவைத்துள்ளார் .
அதோடு அங்கு வசித்துவரும் ஏனையவர்களுக்கான காணி உறுதிப்பத்திரங்களும் விரைவில் வழங்க நடவடிக்கை எடுப்பதாக பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.