துணுக்காய் பிரதேச செயலகம் முன்பாக 6 கோரிக்கைகளை முன்வைத்து இன்று காலை முதல் உண்ணாவிரதம்…

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட உயிலங்குளம் 50 வீட்டுத்திட்டத்தை சேர்ந்த கி தரணிதரன் என்பவர் ,  இன்று காலை முதல் 6 கோரிக்கைகளை முன்வைத்து துணுக்காய் பிரதேச செயலகம் முன்பாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

குறித்த துணுக்காய் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட உயிலங்குளம் 50 வீட்டுத்திட்டமானது 2012 ம் ஆண்டு இந்திய அரசாங்கத்தின் நிதியுதவிளில் ,

SLRC நிறுவனத்தால் 50  வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு காணிகள் வழங்கப்பட்டு  பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மாற்றுவலுவுள்ளோர் அடங்கலாக 50 குடும்பங்கள் குடியேற்றப்பட்டனர்

இருப்பினும் அவர்களது அடிப்படைதேவைகள் பூத்தி செய்யப்படாத நிலையில் வீடுகள் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதால் அங்கு வாழ முடியாத நிலையில் பல குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில் அந்த வீடுகளில் வேறு நபர்களை குடியிருத்தியும் அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் தற்போது குறித்த பகுதியில் 31 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

அவர்களது அடிப்படை தேவைகள் உள்ளடங்கலாக 6 கோரிக்கைகளை முன்வைத்து  குறித்த பிரதேசவாசி  தரணிதரன் இன்று காலை முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்

குறிப்பாக சேதமடைந்த வீடுகளுக்கான நடவடிக்கை 7 வருடங்கள் கடந்தும் தமது காணிகளுக்கான உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படாமை ,

தண்ணீர் வசதியின்மை , பாதை திருத்தம் , வாழ்வாதாரம் , காட்டு யானைகளின் தொல்லை உள்ளிட்ட 6 பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்க கோரி குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படாமைகாட்டு யானைகளின் தொல்லைதண்ணீர் வசதியின்மைபாதை திருத்தம்வாழ்வாதாரம்
Comments (0)
Add Comment