துர்நாற்றம் வீசிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு – யாழில் சம்பவம்…

யாழ்.திருநெல்வேலி பகுதியில்   உயிரிழந்த நிலையில்   48 வயதுடைய யேசுதாசன் நிமல்ராஜ் என்பவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

குறித்த நபர் திருமணம் முடிக்காத நிலையில் தனிமையில் வசித்து வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை முதல் அவரின் நடமாட்டத்தை அயலவர்கள் அவதானிக்கவில்லை.

இந்நிலையில் அவரின்  வீட்டில் இருந்து  துர்நாற்றம் வீசியதை அடுத்து கோப்பாய் பொலிஸாருக்கு  தகவல் வழங்கப்பட்டது.

இதனை அடுத்து அங்கு சென்ற  பொலிஸார்  வீட்டினை திறந்து பார்த்த போது ,குறித்த நபரின்  சடலம் பழுதடைந்த நிலையில் காணப்பட்டுள்ளது.

மேலும் உடனடியாக  சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்த பொலிஸார்  மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதாகவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

ஆண்சம்பவம்துர்நாற்றம்யாழில்
Comments (0)
Add Comment