சென்னையில் இன்று தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டம் தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுச்செயலாளர் விஷால், துணை தலைவர் பொன்வண்ணன், கருணாஸ், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், காவிரி பிரச்சனையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழுமையான ஆதரவு அளிப்பது, கன்னட நடிகர்களின் பேச்சுக்கு கண்டனம் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மேலும், நடிகர் சங்கத்திலிருந்து நடிகர் சங்க முன்னாள் தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை சந்திரசேகர் உள்ளிட்ட 3 பேரையும் நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவர்கள் மூவரும் நடிகர் சங்கத்தில் ஊழலில் ஈடுப்பட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நடிகர் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.